
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக ஜூன் 27ஆம் தேதி கிஷன்கஞ்சில் உள்ள கன்கை மற்றும் மகாநந்தா இணைக்கும் துணை நதியின் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், மதுபானி ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் கடந்த 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.