Published on 10/04/2019 | Edited on 10/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேதி, வயநாடு ஆகிய இருதொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 4 ஆம் தேதி கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான அமேதியில் இன்று மனு தாக்கல் செய்தார்.