Published on 08/05/2019 | Edited on 08/05/2019
ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றமே குறிப்பிட்டதாக கூறியதற்கு உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ஏற்கனவே ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது என பிரச்சாரத்தில் கூறியது தொடர்பாக ராகுல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலேயே அப்படி பேசியதாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை எனவும் ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பதிலில் திருப்தியில்லை என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் இன்று இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.