Skip to main content

YES வங்கி இனி NO வங்கி - ராகுல் காந்தி சாடல்!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' வாராக் கடன் அதிகாரிப்பால் நிதி சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாராக் கடன்களின் அளவு மிக அதிக அளவு சென்றதால் அந்த வங்கியின் நிதி அளவு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் அதனை தற்போது ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 


இதன் மூலம் யெஸ் வங்கி இனி எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. மேலும் அந்த வங்கியில் முப்பது நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை குலைத்துவிட்டதாகவும், YES வங்கி இனி NO வங்கி என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்