புதுச்சேரி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மறியல், போக்குவரத்து பாதிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்திய அவர்கள் இன்று காலை ராஜிவ் காந்தி சதுக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் செல்லும் சாலை சந்திப்பில் 200க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் நீட் தேர்வை கொண்டுவந்த மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசு இதனை உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் அரை மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வெயிலில் மாணவிகள் மயக்கமடைந்ததால் பரபபரப்பு ஏற்பட்டது. தொடந்து காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் அரைமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாலைமறியல் முடிவுக்கு வந்தது.
- சுந்தரபாண்டியன்