
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டது முத்தியால்பேட்டை. இந்த பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளிடம் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் மற்றும் மணி என்ற இரு இளைஞர்கள் நட்பாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு சிறுமிகளையும், இரு இளைஞர்களும் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு இந்த இரு இளைஞர்களின் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து இரு சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முத்தியால்பேட்டை போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் புஷ்பராஜ், மணியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.