2019-20 நிதியாண்டின் முதல் நிதிக் கொள்கை கூட்ட வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்திய வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தரச்சான்று நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த ஆர்.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டம் வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி ஆர்.பி.ஐ. ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகித முடிவுகள், பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதங்கள் நடக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கவிருக்கும் 2019-20 நிதியாண்டின் முதல் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைப்பதா வேண்டாமா, தொழில்துறையின் வளர்ச்சிக்கு என்னென்ன செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது குறித்த முடிவுகளை எடுக்க முன்கூட்டியே இந்த ஆலோசனைக் கூட்டத்தை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.