Published on 18/02/2021 | Edited on 18/02/2021

வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார். மேலும், பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்யவும் ஆளுநரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை செய்துவருகிறார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கும் தலா 14 உறுப்பினர்களின் ஆதரவு (சமமாக) உள்ளது குறிப்பிடத்தக்கது.