Skip to main content

புதுச்சேரி- துணை சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

புதுச்சேரியில் நடைபெறும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய, அப்பதவிக்கு துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து கடந்த- 03 ஆம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

puducherry assembly deputy speaker election held on sep 5

 

அதனையடுத்து காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு நாளை (05- ஆம் தேதி) தேர்தல் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். இப்பதவிக்கு போட்டியிட ஏதுவாக தனது  சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் ராஜினாமா  செய்து அதற்கான கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம்  வழங்கினார்.
 

இப்பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் எம்.என்.ஆர்.பாலன் 05-ஆம் தேதி துணை சபாநாயகர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்