Skip to main content

புதுச்சேரியில் 7 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
புதுச்சேரியில் 7 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது



புதுச்சேரி உருளையன்பேட்டை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று சட்டம் & ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி யளித்தார்.

அப்போது அவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு 1 கிலோ கஞ்சா பறிமுதல் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இன்று கஞ்சா விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரி நட்ராஜ் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர், மேலும் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது பைசல் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் 6 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏற்கனவே 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. என்றும் இதில் 6 நபர்கள் கைது செய்து விசாரணை நடத்திய போது, மேலும் மொத்த கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதன் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும் என்றார். மேலும் சிறப்பாக செயல் புரிந்த போலீசார் அனைவருரையும் பாராட்டினார்.
 
- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்