Skip to main content

மக்களுக்கு கோவாக்சின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படுமா? - ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் பதில்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

ICMR DG

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலான அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவாக்சின் தடுப்பூசிக்கு 77.8 சதவீத செயல்திறன் இருப்பதாக அதன் மூன்றாவது கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும் விதமாகவும், டெல்டா வகை காரோனாவிற்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் விதமாகவும் கோவாக்சின் மூன்றாவது டோஸ் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.

 

கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது டோஸின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன் குறித்து கண்டறிய சோதனை நடத்தப்பட்டு வருவதாக பாரத் பயோடெக் நிறுவனமும் தெரிவித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவாவிடம், மக்களுக்கு கோவாக்சின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படுமா என கேள்வியெழுப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த டாக்டர் பால்ராம் பார்கவா, "இது விஞ்ஞான ஆராய்ச்சி கட்டத்தில் உள்ளது. மூன்றாவது டோஸின் செயல்திறன் இன்னும் அறியப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மூன்றாவது அலை குறித்தும் பேசிய பால்ராம் பார்கவா, "எதிர்கால சவால் மூன்றாவது அலை அல்ல. அப்போது நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் சவால். கரோனா அலை என்ற அம்சத்தை முன்னிலைப் படுத்தாமல், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு நடைமுறைகளிலும், கட்டுப்பாடுகளிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்