Skip to main content

ஜம்மு- காஷ்மீர் பேரவைத் தேர்தல்- பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை! (படங்கள்)

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

ஜம்மு- காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

 

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் இன்று (24/06/2021) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

 

ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது, மாநில அந்தஸ்து, மாநில வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்