Skip to main content

சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

incident happened to two daughters by their Father in maharashtra

தனது சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 56 வயது நபர். இவருக்கு திருமணமாகி 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2025 பிப்ரவரி வரை பல சந்தர்ப்பங்களில் தனது இரண்டு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், ஒரு மகள் கர்ப்பமானதால் அவரை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார். 

அது மட்டுமல்லாமல், அந்த நபர் தனது மனைவியடி அடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொர்பாக விசாரணை நடத்தியதில், பால்கர், கர்ஜத், கன்கவ்லி மறும் சியோன் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 6 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்