Published on 29/10/2021 | Edited on 29/10/2021

அக்டோபர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகரில் 16வது ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் ரோம் நகர் சென்றடைந்தார். ரோம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இத்தாலி அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில், கரோனா பரவல், கரோனா தடுப்பூசி போடும் பணிகள், பொருளாதாரம், சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து தலைவர்கள் ஆலோசிக்கின்றனர்.