Skip to main content

பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தில் பெற்ற பரிசுகளின் மதிப்பு 12.57 லட்சமாம்...அதில் மசூதி வடிவிலான பரிசும் அடக்கம்...  

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
modi

 

பிரதமர் மோடி, ஜூலை 2017ஆம் ஆண்டு முதல் ஜூன் 2018ஆம் ஆண்டுவரை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு 168 பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 12.57 லட்சம். 

 

பிரதமருக்கு கொடுக்கப்பட்ட பாரிசில் மோன்ட்ப்ளாக் கைக்கடிகாரம் 1.10 லட்சம், சில்வர் தகடு 2.15 லட்சம், மோன்டப்ளாக் பேனா செட்டுக்கள் 1.25லட்சம். இதுமட்டுல்லாமல் பிரதமருக்கு பெயின்டிங், சிற்பம், புத்தகங்கள், புகைப்படங்கள் என்று பல்வேறு பரிசுப்பொட்டுகள் உள்ளன. இவை அனைத்தையும் பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சக கருவூலத்திடம் கொடுத்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இக்காலகட்டத்தில், மோடி இஸ்ரேல், ஜெர்மனி, சீனா, ஜோர்டான், பாலஸ்தீன், அரபு அமீரகம், ரஷ்யா, ஓமன், சுவீடன், இங்கிலாந்து, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். 

 

மேலும், பிரதமர் மோடி மசூதி வடிவிலான சிற்பத்தையும், பட்டைக்கத்தி போன்றவற்றையும் பரிசாக பெற்றியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பரிசுப்பொருட்கள் ரூபாய் 5000த்திற்கும் மேல் இருந்தால் அதனை வெளியுறவுத்துறை கருவூலத்தில் கொடுத்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.        

                      

சார்ந்த செய்திகள்