Skip to main content

“நான் தலைகுனிந்து அவரது காலடியில் மன்னிப்பு கேட்கிறேன்” - பிரதமர் மோடி

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
Prime Minister Modi apologized for breaking Chhatrapati Shivaji statue

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது. இதனைக் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான்  கடந்த ஆம் தேதி  சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. 35 அடி உயர் சத்ரபதி சிவாஜியின் சிலை, தலை, கை மற்றும் கால் எனத் தனித் தனியாக முழு சிலையும் விழுந்து நொறுங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சிலை திறக்கப்பட்டு எட்டே மாதத்தில் சிலை சேதமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சிலை சேதத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிலை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பேசிய அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சத்ரபதி சிவாஜி நம் அனைவரின் அடையாளம். அவரது காலடியில் தலை வைத்து ஒரு முறை அல்ல 100 முறை நான் மன்னிப்பு கேட்கத் தயார் என்றார். 

இந்த நிலையில் இன்று அரசுமுறை பயணமாக மும்பை வந்துள்ள பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “சத்ரபதி சிவாஜி ஒரு மன்னர் மட்டுமல்ல; என்னைப் பொறுத்தவரைக் கடவுளுக்கு இணையானவர். இந்தியத் தாயின் மகனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல; எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் தலைகுனிந்து அவரது காலடியில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்