இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. அதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்து நேற்று இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்படவுள்ளார் என்று அதிபரான கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜபக்சே குடும்பத்தில் ஒருவரான கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சே பிரதமாரக பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மஹிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.