![Mucormycosis peoples prevention](http://image.nakkheeran.in/cdn/farfuture/YkCSH21PVmfoTalrJ4jhTy7C26kgYLT8tm_6dpythQ4/1622090504/sites/default/files/inline-images/C888.jpg)
மியூகோமைகோசிஸ் என்றால் என்ன?
மியூகோமைகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது முக்கியமாக மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை உட்கொள்ளும் மக்களைப் பாதிக்கிறது. இது நோய்க் கிருமிகளுடன் போராடும் திறனைக் குறைக்கிறது. பூஞ்சை வித்துக்களைக் காற்றிலிருந்து சுவாசித்த பிறகு அத்தகைய நபர்களின் சைனஸ்கள் அல்லது நுரையீரல் பாதிப்புக்குள்ளாகும்.
அறிகுறிகள்:
கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி வலி, கண்கள் மற்றும் மூக்கு சிவத்தல்.
காய்ச்சல்.
தலைவலி.
இருமல்.
மூச்சுத்திணறல், இரத்த வாந்தி.
மனநிலையில் மாற்றம்.
மியூகோமைகோசிஸ் தொற்றை எவ்வாறு தவிர்ப்பது?
செய்ய வேண்டியவை:
1. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
2. இரத்தக் குளுக்கோஸ் அளவைக் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தப் பின்னரும் நீரிழிவு நோயாளியாக இருக்கும் பட்சத்திலும் கண்காணிக்க வேண்டும்.
3. ஸ்டெராய்டுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான முறையில் பயன்படுத்தவும்,
4. ஆக்சிஜன் சிகிச்சையின்போது ஈரப்பதமூட்டிகளுக்குச் சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.
5. ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான் மருந்துகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.
செய்யக் கூடாதவை:
1. எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்.
2. மூக்கடைப்பு எப்போதும் பாக்டீரியா சைனசிடிஸாக இருக்கும் எனக் கருத வேண்டாம், குறிப்பாக நோய் எதிர்ப்புத் தடுப்பு மற்றும் இம்யூனோமோடுலேட்டர்கள் பயன்படுத்தும் கரோனா நோயாளிகள், தயக்கப்படாமல் பூஞ்சை நோய்க் குறியீட்டைக் கண்டறிவதற்குப் பொருத்தமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் (KOM சோதனை, MALDI- TOF).
3. மியூகோமைகோசிஸிற்கான சிகிச்சையைத் தொடங்குவதில் தாமதம் வேண்டாம்.