குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இன்று (27/06/2022) காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைச் செயலாளரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் கே.டி.ராமராவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடியரசுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது.