இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, எர்டிகா அடுத்த தலைமுறை காரை புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.44 இலட்சம் என்றும் அதிகபட்ச்ச விலை ரூ. 10.90 இலட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் விற்பனைக்குவந்துள்ளது.
எம்பிவி எனும் பன்முக பயன்பாட்டு கார்கள் வகையில், ஹோண்டா பிஆர்-வி, டாடா ஹெக்ஸா மற்றும் டொயோட்டா இன்னோவா கார்களின் விலையைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வந்த எர்டிகா மாடாலுக்கும் இப்போது வந்திருக்கும் மாடாலுக்கும் பெட்ரோலில் இயங்கக்கூடிய கார்களின் விலை ரூ. 65,000 முதல் 71,000 வரை அதிகம் என்றும் டீசலில் இயங்கக்கூடிய கார்களின் விலை ரூ. 5,000 முதல் 20,000 வரை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகியின் எர்டிகா மாடல் கார் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமானது. அதில் இருந்து இதுவரை 4,20,000 கார்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.