அகில இந்திய பார் கவுன்சிலின் தலைவராக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மன்னன்குமார் மிஸ்ரா மற்றும் துணைத் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோர் ஆறாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய பார் கவுன்சிலின் செயலாளர் ஸ்ரீமாண்டோ சென் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். பார் கவுன்சிலின் புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக நான்கு முறை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி. இந்த சாதனையை கடந்த முறை பெற்ற வெற்றியின் மூலம் முறியடித்த இவர்கள், தற்போது ஆறாவது முறையாக இப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.