Skip to main content

அண்டாவில் அமரவைத்து கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்கு அழைத்து சென்ற அவலம்!!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020
incident in MadhyaPradesh

 

 

கர்ப்பிணி பெண்ணை அண்டாவில் அமரவைத்து, பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் கோர்லா என்ற பகுதியில் லட்சுமி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கர்ப்பிணி மனைவியின் கணவர் மற்றும் உறவினர்கள் அண்டாவில் அமரவைத்து மூங்கில் குச்சிகளால் கட்டி ஆற்றில் இறங்கி தூக்கி சென்றுள்ளனர். சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் இப்படி செய்துள்ளனர்.

 

இந்நிலையில் பல்வேறு தடைகளுக்கு பிறகு மருத்துவமனையில் கர்ப்பிணிப்பெண் சேர்க்கப்பட்ட நிலையில்தான், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது. அதாவது அண்டாவில் அமர வைத்து மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு வரப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரவில்லை இதனாலேயே பிரசவத்திற்கு முன்பே குழந்தை இறந்து விட்டது என கர்ப்பிணியின் பெண்ணின் கணவரும், உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்