லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் லஞ்சப் பணத்தை பெறுவதற்கு உருளைக்கிழங்கை 'கோட் வேர்ட்'-ஆக பயன்படுத்தியதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் பகுதியில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராம் கிரிபால் விவசாயி ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி வைரலானது. அதில் வழக்கு ஒன்றுக்காக ராம் கிரிபாலை தொடர்பு கொண்ட விவசாயியிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்டுள்ளார் ராம் கிரிபால். எதிர்த்தரப்பில் பேசும் விவசாயியோ இரண்டு கிலோ உருளைக்கிழங்கு தான் தர முடியும் என தெரிவித்துள்ளார். மூன்று கிலோ உருளைக்கிழங்காவது வேண்டும் என ராம் கிரிபால் கூறியுள்ளார்.
இந்த ஆடியோவில் பேசிக்கொள்ளப்பட்டதில் 'உருளைக்கிழங்கு' என்பது பணம் என்பது தெரியவந்தது. உருளைக்கிழங்கு என்ற வார்த்தையை கோட் வேர்ட்'-ஆக பயன்படுத்தி லஞ்சம் பெறப்பட்டது தெரிய வந்தது. இந்த தகவலையடுத்து கன்னாஜ் எஸ்.பி அமித் குமார் ஆனந்த் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் ராம் கிரிபாலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.