உலக பிரசித்த பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் இன்று நடந்தது. லட்சகணக்கான பெண்கள் பொங்கல் இட்டு வழிப்பட்டதன் மூலம் முந்தைய கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது.
பெண்களின் சபாிமலை எனறு அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா மிகவும் பிரதிஷ்டை பெற்றதாகும். ஆண்டு தோறும் மாசி மாதம் நடக்கும் 10 நாட்கள் திருவிழாவில் 8-ம் நாளன்று பொங்கல் விழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசித்து செல்கின்றனா்.
இந்தநிலையில் 8-ம் நாளான இன்று பொங்கல் விழா நடந்தது. இதற்காக தமிழ்நாடு,கேரளா, மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பெண்கள் பொங்கல் இடுவதற்காக நேற்றே திருவனந்தபுரம் வந்து பொங்கல் இடுவதற்கான இடத்தில் முகாமிட்டியிருந்தனா். இதற்காக நேற்று மதியத்திலிருந்து திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டது. கோவில் வளாகத்தில் இருந்து 10 கி.மீ சுற்றளவில் பொங்கல் நடப்பதால் அங்கு கடைகள் பூட்டபட்டு அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
இன்று காலை 10.15 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கியது. பெண்கள் அனைவரும் "அம்மே சரணம் தேவி சரணம்" என்ற நாமத்தோடு பொங்கல் போட்டனா். பொங்கல் போட தொடங்கிய கொஞ்ச நேரத்தில் திரும்பி பக்கமெல்லாம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதே போல் சுட்டொிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை எங்கிலும் பெண்கள் பொங்கல் இட்டனா்.
2009-ல் நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் போ் கலந்து கொண்டனா். இது கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக இடம் பிடித்தது. இந்த ஆண்டு 30-ல் இருந்து 35 லட்சம் போ் கலந்து கொள்வாா்கள் என்று கோவில் நிா்வாகிகள் எதிா்பாா்த்தனா். அதன்படி இன்று நடந்த பொங்கல் வழிப்பாட்டில் 30 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டதாக கோவில் டிரஸ்ட் தலைவா் சந்திரசேகர பிள்ளை தொிவித்துள்ளாா்.
பொங்கல் விழாவையொட்டி சிறப்பு ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் இன்று மட்டும் அனைத்து நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் உள்ளூா் விடுமுறையும் இன்று விடப்பட்டது.
இதேபோல் குமாி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் இடுவதற்காக ஆற்றுக்கால் சென்றனா்.