Skip to main content

புதுச்சேரி சபாநாயகராக சிவக்கொழுந்து பொறுப்பேற்பு! பதவி கிடைக்காத எம்.எல்.ஏ புறக்கணிப்பு!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 

புதுச்சேரி சபாநாயகராக இருந்த வெ.வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் போட்டி யிடுவதற்காக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால்  சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலுக்காக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. காங்கிரஸ் - தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சட்டப்பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வாழ்த்துரை வழங்கினர்.  தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். 

 

s

அதேசமயம் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  முதல்வரின் பாராளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன், தனக்கு சபாநாயகர் பதவியை தரவில்லை என்பதால் சட்டமன்ற நடவடிக்கையை புறக்கணித்து,  சட்டப்பேரவையில் உள்ள பாராளுமன்ற அலுவலகம் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட  அரசு காரின் சாவிகளை சட்டப்பேரவை செயலர் இடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.

 

s

அதேசமயம் அவரது ஆதரவாளர்கள் சட்டப்பேரவை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும்  முதல்வர் நாராயணசாமியுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு  ராஜினமா செய்வதாக கடிதம்  கொடுத்தனர். 

 

சார்ந்த செய்திகள்