புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனையில் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களாகவும், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்களாவும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு மாத காலமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஜிப்மர் வளாகத்தினுள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணியிலிருந்து நீக்கும் முயற்சியை ஜிப்மர் மருத்துவமனை அதிகாரிகள் மேற்கொள்வதாகவும், ஊதியம் வழங்கவில்லை என்றால் அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.