அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்ற ட்ரம்ப், அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை பிரதமர் மோடியுடன் இணைந்து இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். இன்று தில்லியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
இதற்காக நேற்று தில்லி வந்த அமெரிக்க அதிபர் அங்குள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் தங்கியுள்ளார். முக்கிய பிரமுகர்கள் மட்டும் தங்கும் சாணக்கியா அறையில் அவர் தங்க உள்ளார். இந்த அறையில் இதற்கு முன்பு ஜிம்மி கார்ட்டர், பில் கிளிண்டன், புஷ், ஓபாமா ஆகியோர் தங்கியுள்ளார்கள். இந்த அறையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. துய்மையான காற்றை உறுதி செய்யும் காற்று தர கட்டுப்பாட்டு கருவிகளும் இதில் உள்ளது. ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த அறையில் இருக்கின்றது. இதன் ஒருநாள் வாடகை எட்டு லட்சம் ஆகும்.