பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய ஏர் ஃபோர்ஸிடம் இருந்து ரூ.30,000 கோடி பணத்தை பிரதமர் மோடி சூறையாடி, அதை அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார். இதை கடந்த ஒரு வருடமாக சொல்லிக்கொண்டு வருகிறோம். தற்போது ஆவணங்கள் வந்துகொண்டிருக்கிறது, அதில் பாதுகாப்பு அமைச்சகம் ஃபிரான்ஸ் அரசிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அதே சமயத்தில் பிரதமர் மோடியும் தனியாக ஃபிரான்ஸ் அரசிடம் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
“மனோகர் பரிகரை நேரில் சென்று பார்த்தது ரஃபேல் ஊழல் விவகாரமுக்காக இல்லை. அவருடைய உடல்நலத்தை விசாரிக்கதான் சென்றேன்” என்றார்.
“நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார். ஃபிரான்ஸின் முன்னாள் அதிபரே பிரதமர் மோடிதான் அனில் அம்பானியை தேர்வு செய்தார்” என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “ராகுலின் பேச்சு ஆபத்தானது. மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக சித்தரிக்கும் வகையில் பேசி ஆட்சியை மாற்ற ராகுல் முயற்சிக்கிறார். ஊடகங்களில் வெளியான கடிதம் ரஃபேல் விலைத் தொடர்பானது அல்ல, ராணுவ ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான குறித்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்.