அதிரடி கருத்துகளுக்குச் சொந்தகாரரான தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அங்கு ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து தமிழக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் இருந்த பாஜக தலைவர் பதவியில் கூட அடுத்த நான்கு மாதங்களுக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.
அந்த அளவிற்கு அவரின் ஆளுமை அதிரடியான ஒன்றாக இருந்தது. தற்போது தெலுங்கானாவில் ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் தமிழக மக்களுக்கு முக்கியத் தினங்களின்போது மறக்காமல் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கரோனா தொடர்பாகக் கவிதை ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிந்துள்ளார். அதில்,
தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது...
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு...
அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள் ...முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை... pic.twitter.com/fi6PwNUcga
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 5, 2020
என்று பதிவிட்டுள்ளார்.