Published on 14/10/2020 | Edited on 14/10/2020

100 ரூபாய் நாணயத்தைத் தொடர்ந்து 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார் பிரதமர் மோடி.
ஜனசங்கத் தலைவர்களில் முக்கியமானவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான விஜயராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமை வெளியிட்டார். 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்த விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் விஜயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி. இந்நிலையில், அக்டோபர் 16ம் தேதி உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.