தமிழகத்தின் பழமையான இலக்கியமான தொல்காப்பியத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர் சிறுதானியங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும் எனவும் தொல்காப்பியத்தில் சிறுதானியங்கள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்க அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்கள் மிக முக்கியமானவை மற்றும் சிறந்தவை எனவும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காப்பவை சிறுதானியங்கள் எனவும் கூறினார். சிறுதானியங்களை பயன்படுத்தி பல உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த உரையில் நாட்டின் நீர் நிலையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் பிரதமர் மோடிக்கு சிறு தானியங்கள் அடங்கிய தொகுப்பை பரிசாக வழங்கியதும்; தமிழகம் வந்த பிரதமருக்கு தொல்காப்பியம் புத்தகம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.