Skip to main content

"நீங்கள் அறைந்தால் கூட ஆசீர்வாதம் தான்"-'மம்தாவுக்கு பிரதமரின் அடடே ரிப்ளை'!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் "ஜனநாயகத்தின் வழியாக பிரதமரை ஓங்கி அறைய வேண்டும் என்று" பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ,"மம்தாவிடம் அறை வாங்கினால் கூட ஆசீர்வாதமாகத் தான் எண்ணுவேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

MAMATA

 

அவர் மேலும் பேசுகையில் "மம்தா  என்னை அறைய வேண்டும் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன்". நான் உங்களை மிகவும் மதிக்கிறேன் என்றும் , உங்களிடம் அறை வாங்கினால் கூட ஆசீர்வாதம் தான் என கூறியுள்ளார். ஆனால் ஒரு விஷயத்தை சொல்ல விருப்புகிறேன். உங்கள் கூட்டாளிகளையும் அறைய தயக்கம் காட்டியிருக்கவில்லை என்றால், சிட்ஃபண்ட் மோசடி நடந்திருக்காது என்று தெரிவித்தார். நீங்களும் இவ்வளவு பயத்துடன் இருந்திருக்க மாட்டீர்கள் என்று உரை ஆற்றினார். முன்னதாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என தெரிவித்தார்.இந்தியாவில் பிரதமர் மற்றும் ஒரு மாநிலத்தின் முதல்வர் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது இதுவே முதல்முறை.

 

 

சார்ந்த செய்திகள்