ஓடுபாதையில் நின்றிருந்த விமானத்தில் திடீரென புறாக்கள் பறந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குஜராத்தில் உள்ள ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து புறப்பட ஆயத்தமாக இருந்த நிலையில், விமானத்தில் மறைந்திருந்த இரண்டு புறாக்கள் விமானத்துக்குள் வட்டமிட ஆரம்பித்தன.
திடீரென விமானத்துக்குள் புறாக்கள் பறப்பதை பார்த்த பயணிகளில் சிலர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சிலர் புறாவை தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். பயணிகள் சிலர் அந்த புறாக்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு விமான நிலைய ஊழியர்கள் வந்து அந்த புறாக்களை பிடித்தார்கள். பல மணிநேர பரபரப்புக்களுக்கு பிறகு விமானம் மீண்டும் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனுடைய வீடியோ காட்சிகள் இமையத்தில் வைரலாகி வருகின்றது.