Skip to main content

"மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது" - முன்னாள் முதல்வரின் மனைவி பேச்சு!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

amrutha

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்ததால், முதல்வராக இருந்த அவர் தற்போது மஹாராஷ்ட்ராவின் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

 

இந்தநிலையில்  தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவியான அம்ருதா ஃபட்னாவிஸ், மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் மோசமான சாலைகளை குறித்து பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அம்ருதா ஃபட்னாவிஸ் கூறியுள்ளதாவது; மும்பையில் நடக்கும் விவாகரத்துகளில் மூன்று சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. போக்குவரத்து நெரிசலால், மக்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கமுடிவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்