கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை கடந்தாண்டு தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதியம் இருக்கும்போது, இந்த புதிய நிதியம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
மேலும் இந்த பிஎம் கேர்ஸ் நிதியை பொதுக் கணக்கு குழுவால் தணிக்கை செய்யமுடியாது எனக் கூறப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிதியத்திற்கு இதுவரை நிதியளித்தவர்கள் யார்? எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோ பதில் வராததால், இன்று வரை பிஎம் கேர்ஸ் நிதியம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. மேலும் பிஎம் கேர்ஸ் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களிலும் விசாரணை நடைபெற்றது.
இந்தநிலையில் பிஎம் கேர்ஸ் நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்க வேண்டும், பிஎம் கேர்ஸ் நிதியைத் தணிக்கை செய்து அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும். பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்பட நன்கொடைகள் மற்றும் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக, 10 நாட்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.