Skip to main content

பேடிஎம் தகவல் திருட்டு போலியா? - பேடிஎம் நிர்வாகம் விளக்கம்

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகள் அவதூறானவை என பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

எல்லா இணையத்தளங்களிலும் ஒரு சென்சேஷனல் செய்தியாகிக் கொண்டிக்கும் ஒன்றுதான்  பேடிஎம் தகவல் திருட்டு எனும் செய்தி. 

 

அதாவது பணப் பரிமாற்றம் மற்றும் கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகளுக்கான பயன்படும் பேடிஎம் எனும் தனியார் சேவை நிறுவனம் தங்களது வடிக்கையளர்களிடம் இருந்து தகவலை திருடுவதாக வந்த செய்தியை அந்த நிறுவனம் அந்த செய்தி போலியானது என மறுத்துள்ளது.

paytm

 

இது தொடர்பான ட்விட்டர் பதிவில் தகவல் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் முற்றிலும் போலியானது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் 100 சதவிகிதம் பாதுகாப்பிலுள்ளது. சட்ட அமலாக்க துறையின் வேண்டுதலால் அவர்களை தவிர வேறு யாரிடமும் பகிரப்படவில்லை எனவே யாரும் நம்ப வேண்டாம் தொடர்ந்துவரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என தெரிவித்துள்ளது.

 

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த பேச்சு  சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது பேடிஎம் நிறுவனத்தின் மீது இந்த குற்றச்சாட்டும் பேடிஎம்மின் பதிலும் பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்