Published on 04/12/2019 | Edited on 04/12/2019
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.
ஜாமீனில் செல்லும் ப.சிதம்பரம், வழக்குகள் தொடர்பாக பேட்டி தருவதோ, அறிக்கை விடவோ கூடாது. மேலும், சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.