டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்று, அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்பட்ட உள்ளன. இதனை முன்னிட்டு பாஜக, ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் ஜனவரி 27 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், 'துரோகிகளை சுட்டுவிடு' என்று கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மும்பையில் பேசிய ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி, "அனுராக் தாக்கூருக்கு நான் சவால்விடுகிறேன், சுடும் இடத்தைச் சொல்லுங்கள் நான் அங்கு வரத் தயாராக இருக்கிறேன்.உங்கள் அறிக்கைகள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தாது, ஏனென்றால் எங்கள் தாய்மார்களும், சகோதரிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டைக் காப்பாற்ற சாலைகளில் இறங்கிப் போராடத் தயாராகவுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.