தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஓமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'ஒமிக்ரான்' நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் 'ஓமிக்ரான்' கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், தற்பொழுது மகாராஷ்டிராவில் மேலும் ஏழு பேருக்கு 'ஒமிக்ரான்' தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.