Skip to main content

மக்களவை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Lok Sabha temporary speaker sworn in

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது. இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இதன் மூலம் 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தற்காலிக சபாநாயகர் தேர்வு, நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

Lok Sabha temporary speaker sworn in

இந்நிலையில் 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 8 முறை எம்பியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக 7 முறை எம்பியாக இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்தததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மக்களவை தற்காலிக சபாநாயகருக்கு உதவி செய்யும் குழுவின் 3 உறுப்பினர் பொறுப்புகளையும் ஏற்காமல் நிராகரிப்பதாக  இந்தியா கூட்டணி அறிவித்திருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அத்வானி!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Advani returned home from the hospital

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்தனர். இந்நிலையில் அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று (04.07.2024) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Next Story

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Advani admitted to hospital again

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும்  சிறுநீரக பாதிப்புகளால்  அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்து வருகிறார்கள்.