காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், 2014ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வருடத்திற்கு 2கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொன்ன மோடியின் தற்போதைய ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு உள்ளது. 2017-2018 கால கட்டத்தில் இந்தியாவில் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி அரசாங்கம் வெளியிடாமல் இருந்த அறிக்கையை வேறு ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வேலையில்லா திண்டாட்டம் பற்றி வந்த அறிக்கையை அடுத்து #HowsThejob என்று ட்விட்டரில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. தற்போது அது உலகளவில் நான்காவது இடத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல வேலையிண்மை என்ற ஆங்கில வார்த்தையும் இந்தியளவில் ட்ரெண்டாகி இருக்கிரது.