
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை ஆறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது மத்திய அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் தற்போது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 33 ஆண்டுகளாக தேர்வெழுதி வந்த நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். அதுவும் தேர்வு எழுதாமலேயே இவர் தேர்ச்சி பெற்றுள்ளதுதான் கூடுதல் சிறப்பு. தெலுங்கானா அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தேர்ச்சி பெற்றுள்ள அவர் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.