பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினசரி காலையில் பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் வீடியோவை தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். தினமும் அவர் பதிவிடும் வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
சமீபத்தில் கைலாசா என்றொரு தனி நாடை உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டில் சேர்ந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கைலாசா இணையதளத்தில் பதிவு செய்து தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், “2003ஆம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மீகத் துறையில் நான் என்றோ தலைவனாகிவிட்டேன். கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கைலாசாவை அமைத்தே தீருவேன்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.