Published on 27/02/2020 | Edited on 27/02/2020
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நிறுத்தப்படலாம் என சமூகவலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரூ .2,000 நோட்டுகள் இல்லாத வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகவும், 2000 நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்தாலும், அது குறைக்கப்பட்டு விரைவில் 2000 ரூபாய் நோட்டுகள் பரிமாற்றங்கள் நிறுத்தப்படும் எனவும் செய்திகள் பரவின. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, "எனக்குத் தெரிந்தவரை, 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்துவது தொடர்பாக வங்கிகளுக்கு எந்த அறிவுரைகளும் வழங்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.