இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.
இன்று (26/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105-லிருந்து 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894- லிருந்து 15,301 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,697- லிருந்து 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,89,463 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,47,741 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,453 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,931 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் டெல்லியில் 73,780, தமிழகத்தில் 70,977, குஜராத்தில் 29,520, ராஜஸ்தானில் 16,009, மத்திய பிரதேசத்தில் 12,596, உத்தரப்பிரதேசத்தில் 20,193, ஆந்திராவில் 10,884, தெலங்கானாவில் 11,364, கர்நாடகாவில் 10,560, கேரளாவில் 3,726, புதுச்சேரியில் 502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,296 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் 407 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.