Skip to main content

மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு...

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

தமிழகத்தின் ராமேஸ்வரம், தூத்துக்குடி முதல் இலங்கை வரை பரவி உள்ள மன்னார் வளைகுடாவில் புதியதாக 62 கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

new creatures found in mannar gulf

 

 

10, 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்கெனவே ‌4223 வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப்பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள் உள்ளிட்ட‌வைகள் மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்வதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்