Skip to main content

குறைய தொடங்கிய கரோனா பாதிப்பு - அதிகரிக்க தொடங்கிய உயிரிழப்பு!!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

df

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்துவருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,67,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,529 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து நேற்று (18.05.2021) ஒரே நாளில் 3,89,359 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை  2.19 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 33 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். ஒருபுறம் பாதிப்பு குறைந்துவந்தாலும், மறுபுறம் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவாக தற்போது அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்