Skip to main content

2048 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான போட்டியில் களமிறங்கும் இந்திய மாநிலம்!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

OLYMPICS

 

புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்தும் உரிமையைப் பெற முயன்று பல்வேறு நாடுகள் பலமுறை தோல்வியைச் சந்தித்துள்ளன. இந்தநிலையில், இந்திய நகரம் ஒன்று ஒலிம்பிக் போட்டியை நடத்த களமிறங்கியுள்ளது.

 

இந்தியத் தலைநகரான டெல்லியில் ஆட்சியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, இன்று பட்ஜெட் தக்கல் செய்தது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2048 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், டெல்லியில் நடத்தப்பட வேண்டும் என்ற பார்வை பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி, 2048 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கும். ஒலிம்பிக் நடத்துவதற்காக உருவாக்க வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளை நாங்கள் ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

 

முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, டெல்லி மக்களின் தனிநபர் வருமானத்தை 2047 ஆம் ஆண்டில், சிங்கப்பூருக்கு இணையாக உயர்த்துவதே ஆம் ஆத்மி தலைமையிலான அரசின் நோக்கம் எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்