Skip to main content

எத்தனை முஸ்லீம்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்? - பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சைப் பேச்சு

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

மின்சாரத் திருட்டு விவகாரத்தில் இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

sanjay

 

 

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் சில தினங்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மின்சாரத் திருட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 

இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி மின்வாரிய பொருளாளர் நிவாஸ் சிங் என்பவருக்கு, செல்போன் மூலம் அழைப்புவிடுத்த அப்பகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சஞ்சய் குப்தா முஸ்லீம்களைக் கைது செய்யாததைக் கண்டித்து பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த உரையாடலின்போது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எத்தனை முஸ்லீம்களின் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற அறிக்கை என்னிடம் வந்தாக வேண்டும். பணியிட மாற்றம் செய்துகொள்வதால் நீங்கள் தப்பிவிட முடியாது. உ.பி.யில் எங்கு சென்றாலும் உங்களை விடமாட்டேன். முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் சோதனை நடத்தி, அவர்களைக் கைது செய்யவேண்டும். உங்கள் துறையில் இருந்து தொழிலதிபர்களையும் குறிப்பாக இந்துக்களை மட்டுமே கைது செய்திருக்கிறீர்கள். நான் சும்மா விட மாட்டேன்’ என பேசியுள்ளார். இந்த உரையாடலை பதிவு செய்துகொண்ட அவிநாஸ், சமூக வலைதளங்களில் பரப்பி நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.  

 

சார்ந்த செய்திகள்