கடந்த தேர்தலில் குஜராத்தின் வத்காம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுயேட்சையை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவனிக்கு பிரபல ரௌடியின் மூலம் கொலை மிரட்டல் விடப்பட்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உமர் காலித் - ஜிக்னேஷ்
இது சம்மந்தமாக காவல்துறையில் எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜிக்னேஷுக்கு கொலை மிரட்டல் விட்ட நபரையும், என்ன பேசினார்கள் என்பதையும் ட்வீட்டரில் பதிவேற்றினார்.
நேற்றும் இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததில் மூன்று நாட்களை தொடர்ந்து இன்றும் ரவி பூஜாரி என்னும் ரௌடியினால் கொலை மிரட்டல் விடப்பட்டுத்தான் உள்ளது.
"எனக்கு மிரட்டல் விடுவது என்பது அரசின் சதியா? பூஜாரியை வைத்து எங்களை கொல்வதனால் பாஜகவின் வேலையை சுலபமாக முடிந்துவிடும். இதன் மூலம் அம்பேத்கரியத்தை மிரட்டப் பார்க்கிறார்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னுமொரு ட்வீட்டில் மூன்று நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணமாக இருக்கிறது. ரவி பூஜாரியே ஆஸ்திரேலியாவில் இருந்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அந்த லிஸ்டில் உமர் காலித் எனும் JNU கல்லூரி மாணவரும் இருப்பதாக அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
உமர் காலித் என்பவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவரை தலைமறைவு தாதா என்று தன்னை அழைத்து கொள்ளும் ரவி பூஜாரி என்பவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
உமர் காலித் தன் ட்விட்டரில் இது பற்றி பதிவிட்ட போது, தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் 'நானும், ஜிக்னேஷும் அவரது ஹிட்லிஸ்டில் இருக்கிறோம். இதே நபர்தான் என்னை 2016 ஆம் ஆண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.